Regional01

கொலை வழக்கில் சரணடைந்தவரிடம் விசாரணை :

செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே தடங்கம் கிராமத்தில் வச்சகாரப்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் அனந்தராமன்(45) கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார்.

இதில் வச்சக்காரப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலை வர் லட்சுமணன் மகன் தினேஷ் பாபு(25) விருதுநகரில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தார். அவ ரை சிறைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் விருதுநகரில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். தினேஷ்பாபுவை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதித்துறை நடுவர் மருதுபாண்டி அனுமதியளித்தார். அதையடுத்து, தினேஷ்பாபுவை போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT