கரோனா பரவலை தடுக்கும் வகையில் 1,000 ரேஷன் கார்டுகள் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 1,156 முழுநேர ரேஷன் கடைகள் மற்றும் 437 பகுதிநேர கடைகள் என மொத்தம் 1,593 ரேஷன் கடைகள் உள்ளன.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தற்போது, 1,000 ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் டோக்கன் முறையை பின்பற்றி அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனானிகளுக்கு முன்னுரிமை அளித்து பொருட்கள் வழங்கவும், தனிமைப்படுத்தப் பட்டவர்கள் வசிக்கும் பகுதிக்கு ரேஷன் கடை ஊழியர்கள் கரோனா தடுப்பு பாதுகாப்புடன் சென்று பொருட்களை வழங்க மாவட்ட வழங்கல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.