Regional02

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த கேத்துநாயக்கனப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி(50). இவரது மனைவி காமாட்சி (40). மனைவிமீது ஏற்பட்ட சந்தேகத்தில் வெட்டிக் கொலை செய்தார். சிங்காரப்பேட்டை போலீஸார் ரவியை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் ரவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

SCROLL FOR NEXT