Regional03

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சேலம் மத்திய சிறையில் ஆய்வு :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ராம்ராஜ் நேற்று (27-ம் தேதி) சேலம் மத்திய சிறை மற்றும் பெண்கள் கிளைச் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

சேலம் மத்திய சிறை மற்றும் பெண்கள் கிளைச் சிறையில் கைதிகளிடம் விசாரணை நடத்தினோம். அவர்களின் குழந்தைகளுக்கு உதவிகள் தேவைப்படுகிறதா, படிப்பு செலவுக்கு உதவிகள் வேண்டுமா என கேட்டறிந்தோம். கரோனா தொற்று காலத்தில் குழந்தைத் திருமணம் நாடு முழுவதும் அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் இதனை தடுக்கும் விதத்தில் அரசு ஆறு குழுக்களை அமைத்து, மாவட்டம், கிராமம், வட்டார அளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குழுக்களுக்கு சட்ட அதிகாரம் வழங்க வேண்டும்.

கரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

கைதிகளின் குழந்தைகளுக்கு தேவையான படிப்புக்கான உதவிகளை செய்வோம். கடந்த ஏப்ரல் மாதம் சேலத்தில் பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக ஆணையம் நேரடி யாக விசாரணை நடத்தியது. இதில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை அரசு ஏற்றுக் கொண்டு உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT