கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் நேற்று காணொலி மூலம் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. கடலூரில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடி ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் இக்கூட்டத்தில் பங்கேற்றார். மேலும், வேளாண், பொதுப்பணி, மின்வாரியம், வருவாய் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகளின் கேள்வி களுக்கு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி வாயிலாக பதிலளித்தனர்.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை வரவேற்ற விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் மாதவன், அனைத்து பயிர்களுக்கும் பயிர்க்காப்பீடு கிடைக்க ஏற்பாடு செய் வேண்டும் என்று வலியுறுத்தினார்.