குறிஞ்சிப்பாடியில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். 
Regional02

குறிஞ்சிப்பாடியில் - 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீஸார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

குறிஞ்சிப்பாடி கேஎன்வி நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற சக்திவேல் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 2 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன. சக்திவேல் கொடுத்த தகவலின் பேரில் குறிஞ்சிப்பாடி கேஎன்வி நகரில் உள்ள அவரின் மைத்துனர் ராஜா என்பவரது வீட்டில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 400 கிலோ குட்கா பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.5 லட்சம் ஆகும். இதுதொடர்பாக சக்திவேல் (45), மீனாட்சி பேட்டையைச் சேர்ந்த சிவமணி (49), சத்திரத்தைச் சேர்ந்த கதிர்வேல் (51) ஆகி யோரை போலீஸார் கைது செய் தனர். தலைமறைவாக உள்ள வடலூர் சுரேஷ், ராஜா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT