ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர்.படம்:எல்.பாலச்சந்தர் 
Regional02

உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி - மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விருதுநகர்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் அரிஹரசுதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் நிலர்வேணி, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசிநாததுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் முனியசாமி, மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் முருகன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா செயலாளர் எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார்.

திண்டுக்கல்

பழைய ஆயக்குடி, பாலசமுத்திரம், கொடைரோடு விளாம்பட்டி, சித்தரேவு உள்ளிட்ட இடங்களிலும் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

SCROLL FOR NEXT