Regional02

லாரி - பேருந்து மோதல்இரு ஓட்டுநர்கள் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

சென்னையில் இருந்து கம் பத்துக்கு ஆம்னி பேருந்து ஒன்று, தேனி மாவட்டம் தப்புக்குண்டு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது.

அதிவேகமாகச் சென்ற நிலையில் நிலைதடுமாறி கம்பத்தில் இருந்து ராமநாதபுரத்துக்குச் சென்று கொண் டிருந்த லாரி மீது நேருக்கு நேராக மோதியது. இதில் இரண்டு வாகனங்களின் முன்புறமும் முற்றிலுமாக உருக்குலைந்தன. பேருந்து ஓட்டுநர் அனுமந்தன் பட்டியைச் சேர்ந்த மனோஜ் கண்ணன்(28) தலை நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தார்.

லாரி ஓட்டுநர் விக் னேஷ்(42) தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த பேருந்து பயணிகள் மதன்(25), ஹர்ஷன்(26), பிரேம்குமார் ஆகிய 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரபாண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT