சேலம் இரும்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்கு புதிய ஊக்க ஊதிய திட்டத்தை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தால் ஆள் பற்றாக்குறை காலத்திலும், அதிக வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனவே, ஊக்க ஊதிய திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.