Regional01

சேலத்தில் 65 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் நேற்று 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 73 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 15 பேர், வட்டார அளவில் நங்கவள்ளியில் 7, எடப்பாடியில் 6, தாரமங்கலத்தில் 5, சங்ககிரி, மேச்சேரியில் தலா 4, ஓமலூரில் 3, ஆத்தூர், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டியில் தலா 2, காடையாம்பட்டி, கொளத்தூர், மகுடஞ்சாவடி, சேலம், வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையத்தில் தலா 1, நகராட்சி பகுதிகளில் மேட்டூரில் 6, ஆத்தூரில் ஒருவர் என மாவட்டம் முழுவதும் 65 பேர் பாதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT