Regional02

11 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல் :

செய்திப்பிரிவு

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் திருவாரூர் மாவட்ட கிளை சார்பில், தமிழ்நாடு மாநில கிளையிடமிருந்து பெறப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான 22 ஆக்சிஜன் செறிவூட்டிகளை 11 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில், சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி முன்னிலை வகித்தார்.

ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மாவட்ட கிளைத் தலைவர் ராஜ்குமார், செயலாளர் வரதராஜன், துணைத் தலைவர் ஏ.வி.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த செறிவூட்டிகள் மாவட்டத்தில் உள்ள பெரும்பண்ணையூர், முத்துப்பேட்டை, ஆலங்குடி, அடியக்கமங்கலம், எடையூர்சங்கேந்தி, வடுவூர், திருவிழிமிழலை, உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை, பூந்தோட்டம், ஆலத்தம்பாடி ஆகிய 11 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT