Regional03

ஆசிரியர்களுக்கு இன்று கரோனா தடுப்பூசி முகாம் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் செப்.1-ம் தேதி முதல் 9-ம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, திருமயம், அறந்தாங்கி, மணமேல்குடி மற்றும் ஆலங்குடி ஆகிய அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இன்று (ஆக.27) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இதில்,மாணவர்களின் பெற்றோர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT