Regional02

16.40 டன் ரேஷன் அரிசி தூத்துக்குடியில் பறிமுதல் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி புறவழிச்சாலை ரவுண்டானா பகுதியில் உள்ளகல்லூரி நகர் 2-வது தெருவில் ஒரு குடிசையில் ரேஷன் அரிசிபெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள குடிசையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. தலா 40 கிலோ எடை கொண்ட 410 மூட்டைகளில் மொத்தம் 16.40 டன் ரேஷன் அரிசி அங்கு இருந்தது.

அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக தூத்துக்குடி மாதா நகர் 6-வது தெருவை சேர்ந்த திருமணிராஜா (43) என்பரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT