Regional02

குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் :

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஓபசமுத்திரம் ஊராட்சியில் சில தெருக்களில் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லாததால், மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வாசுதேவன், நடராஜன் மற்றும் ஆரம்பாக்கம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீரை சீராக விநியோகம் செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

SCROLL FOR NEXT