Regional01

லஞ்சம் கேட்ட விஏஓ கைது :

செய்திப்பிரிவு

திண்டிவனம் அருகே தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரகுமார்(30). இவர்தன் தந்தை ஏழுமலை பெயரில் உள்ள

4 ஏக்கர் நிலத்தை பட்டா மாற்றம் செய்யவேண்டி வருவாய்த் துறையில் விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் ராஜி (59) ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் உத்திரகுமார் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை நேற்று கிராம நிர்வாக அலுவலர் ராஜியிடம் உத்திரகுமார் கொடுத்தார். அப்போது இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ் தலைமையிலான போலீஸார் கிராம நிர்வாக அலுவலர் ராஜியை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT