ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் வனவர் சடையாண்டி தலைமையில் வனத்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது பழுதடைந்து நிறுத்தப்பட்டிருந்த படகில் 250 கிலோ கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பு ரூ.12.50 லட்சம். அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.