Regional02

எஸ்ஐ பணிக்கு தேர்வான 42 பேருக்கு பணி ஆணை :

செய்திப்பிரிவு

நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு,தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகர துணைக் கோட்டத்தில் 2 பேர், ஊரக துணைக் கோட்டத்தில் 3 பேர், மணியாச்சி துணைக்கோட்டத்தில் 5 பேர், கோவில்பட்டி துணைக் கோட்டத்தில் 5 பேர், விளாத்திகுளம் துணைக்கோட்டத்தில் 8 பேர், வைகுண்டம் துணைக் கோட்டத்தில் 13 பேர், திருச்செந்தூர்துணைக் கோட்டத்தில் 4 பேர், சாத்தான்குளம்துணைக் கோட்டத்தில் 2 பேர் என,மொத்தம் 42 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் 42 பேருக்கும் மாவட்ட காவல்அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

நிகழ்ச்சியில் எஸ்பி பேசும்போது, “நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து முன்மாதிரியாக இருக்க வேண்டும். மக்களுக்கு உதவுவதிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் நேர்மையாகவும், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற வேண்டும். பணியிலும், சொந்தவாழ்க்கையிலும் நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் குடும்பத்தின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் உடல் நலத்தையும் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

ஏடிஎஸ்பிக்கள் கோபி, கார்த்திகேயன், இளங் கோவன் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT