Regional02

விநாயகர் சிலை தயார் செய்ய தடை : அனுமதி தரக்கோரி ஆன்மிக அமைப்பு கோரிக்கை

செய்திப்பிரிவு

ராஜபாளையம் தர்மபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 33 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சதுர்த்தியை முன்னிட்டு இந்த அமைப்பின் சார்பில் சிலை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக விநாயகர் சிலை செய்ய அனுமதி இல்லை எனக்கூறி, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தடை விதித்து விட்டனர்.

மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற நிர்வாகி ராமராஜ் கூறுகையில், சதுர்த்தி ஊர்வலத்தை அரசு விதித்த கட்டுப்பாட்டுடன் நடத்துவோம். எனவே, விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகளை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT