இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விவேகானந்தன், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று பிறந்து சில நாட்களே ஆன நிலையில் காணப்பட்ட மரநாய் குட்டியை மீட்டனர். அதன் தாயை அப்பகுதியில் இருந்த அடர்ந்த புதர் பகுதிக்குள் சென்று தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னரும் குட்டியின் தாய் கிடைக்காததால், மரநாய் குட்டியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.