Regional01

ஈரோடு மாவட்டத்தில் 3 நாளாக மழை கொடுமுடியில் 68 மி.மீ பதிவு :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக காலை முதல் மதியம் வரை வெயிலும், மாலையில் மழைப்பொழிவும் இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

கொடுமுடி, சாலைப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சாரல் மழை பெய்தது.

ஈரோட்டில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மி.மீ): கொடுமுடி 68, குண்டேரிப்பள்ளம் 30.6, மொடக்குறிச்சி 16, ஈரோடு 12, சென்னிமலை 9.4, பெருந்துறை 9, வரட்டுப்பள்ளம் 4.4.

பவானிசாகர் அணை நிலவரம்

SCROLL FOR NEXT