தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டியில் சுப்பையா பாண்டியன் என்பவரது இருசக்கர வாகனம்திருட்டு போனது. மேலும், சொக்கம்பட்டியைச் சேர்ந்த திருமலைக்குமார், சின்னத்துரை ஆகியோரின் பலசரக்கு கடைகளிலும் கதவை உடைத்து, உள்ளே இருந்த பணம் திருடப்பட்டது. இதுகுறித்த புகார்களின்பேரில், சொக்கம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.விசாரணையில், சொக்கம்பட்டி தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த கணேசன்(19) என்பவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. கணேசனை போலீஸார் கைது செய்தனர்.