விருதுநகரை சேர்ந்த அய்யனார் மகன் அ. விமல்ராஜ் (21). இவர் தனது நண்பர் செல்வன் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டு, நேற்று அதிகாலையில் அங்கிருந்து விருதுநகருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நாங்குநேரி அருகே கிருஷ்ணன்புதூர் பகுதியில் நான்குவழி சாலையிலுள்ள பாலத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதியது.
பலத்த காயமடைந்த விமல்ராஜும், செல்வனும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விமல்ராஜ் உயிரிழந்தார்.