வேப்பனப்பள்ளி பகுதியில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் ஒரு ஏக்கர் பரப்பளவில் வெற்றிலைத் தோட்டம் சேதமானது. 
Regional02

கிருஷ்ணகிரி, தருமபுரியில் கனமழை :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மிதமானது முதல் கனமழை பெய்தது. குறிப்பாக வேப்பனப்பள்ளி, தீர்த்தம், குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, நாச்சிகுப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.

காற்றுடன் பெய்த மழைக்கு பத்தலப்பள்ளி கிராமத்தில் 1 ஏக்கர் வெற்றிலை தோட்டம், 2 ஏக்கர் தக்காளி, 2 ஏக்கர் பீட்ரூட் பயிர்கள் நாசமானது.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது இப்பகுதியில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதமானது. தோட்டக்கலை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்றனர்.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மிமீ) விவரம்: கிருஷ்ணகிரி33.20, ஓசூர் 12, தேன்கனிக்கோட்டை 10.20, தளி 10, சூளகிரி 4 மிமீ மழை பதிவாகி இருந்தது.

மாரண்ட அள்ளியில் 75 மி.மீ மழை

SCROLL FOR NEXT