Regional03

சட்ட விரோதமாக தங்கியிருந்த - வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பேர் பெருந்துறையில் கைது :

செய்திப்பிரிவு

பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் செயல்படும் ஆலைகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் விதிமுறைகளை மீறி வங்கதேசம் நாட்டைச் சேர்ந்தவர்களும் கலந்து, தங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அவர்களது பெயர் இபாதுல் அலி (24), முஜாம் மண்டல் (28) என தெரியவந்தது. இருவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பாஸ்போர்ட், விசா இல்லாமல் மேற்கு வங்க மாநிலத்தில் குடியேறியதும், அங்கிருந்து பெருந்துறை வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், இவர்களுடன் தங்கியிருந்த ஜஹங்கர், ஆதாஸ் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT