பாபுலால், சாந்தி. 
Regional01

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி சோகத்தில் ஆழ்ந்த உறவினர்கள் :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் பாபுலால்(57). எலக்ட்ரீசியனாகப் பணிபுரிந்தார். இவரது மனைவி சாந்தி(51). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பாபுலால் நேற்று முன்தினம் இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதை அறிந்த மனைவி சாந்தி மயக்கம் அடைந்தார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். கணவர் இறந்ததால் மனமுடைந்த மனைவி சில மணி நேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT