Regional03

திருப்பத்தூர் ஒன்றிய கூட்டத்துக்கு அரசு அதிகாரிகள் வருவதில்லை : திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கூட்டத்துக்கு அரசு அதிகாரிகள் சரியாக வருவதில்லை என திருப்பத்தூரில் நடந்த ஒன்றியக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் சகாதேவன் புகார் தெரிவித்தார்.

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் நடந்தது. ஒன்றியத் தலைவர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தென்னரசு, ஜஹாங்கீர் முன்னிலை வகித்தனர்.

அப்போது கவுன்சிலர் பழ னியப்பன் (அதிமுக) பேசு கையில், திருப்பத்தூர் பேருந்து நிலையத்துக்கு எதிரே ஊராட்சி ஒன்றியத்தின் பழைய கட்டிடங்கள் பயன்பாடின்றி உள்ளன. அவற்றை இடித்துவிட்டு புதிய கடை கள் கட்டி வாடகைக்கு விட வேண்டும், என்றார்.

கவுன்சிலர் சகாதேவன் (திமுக) பேசுகையில், ஒன் றியக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தாலும் பல்வேறு துறை களைச் சேர்ந்த அதிகாரிகள் வரு வதில்லை. இதனால் குறைகளை தெரிவிக்க முடியாதநிலை உள் ளது என்றார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு பேசுகையில், ‘அடுத்த கூட்டத்துக்கு அனைத்து துறை அதிகாரிகளும் வர ஏற்பாடு செய் யப்படும்,’ என்றார்.

SCROLL FOR NEXT