தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிரதான அருவி பகுதியில் சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர். 
Regional02

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு :

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மேலும் 1,000 கன அடி அதிகரித்துள்ளது.

பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 21-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 7,000 கன அடியாக இருந்தது. நேற்று முன் தினம் விநாடிக்கு 8,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. நேற்று நீர்வரத்து மேலும் 1,000 கன அடி அளவுக்கு அதிகரித்தது. நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 9,000 கன அடி என்ற அளவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரிநீர் மட்டுமன்றி தமிழகத்தை நோக்கி வரும் காவிரியாற்றோரத்தில் உள்ள வனப் பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் மழையாலும் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அளவு படிப்படியாக அதிகரிப்பதால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட இடங்களைக் கடந்து செல்லும் நீரின் ஆர்ப்பரிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 550 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 65.60 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 65.77 அடியானது. நீர் இருப்பு 29.17 டிஎம்சி.

SCROLL FOR NEXT