Regional01

வழிப்பறி செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது :

செய்திப்பிரிவு

திருச்சி சிந்தாமணி பூசாரித் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (42). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ரவுடியான விஜய்(19), தினேஷ்குமார்(21), மகேஷ்(25), முகில்குமார்(25) ஆகியோர் கத்தியைக் காட்டி மிரட்டி மாரிமுத்துவிடமிருந்து ரூ.500 பறித்துச் சென்றனர். இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT