பாளையங்கோட்டை கோரிப்பள் ளம் தேவாலயம் அருகே, பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று துணியில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தையை போலீஸார் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை அனாதையாக விட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.