Regional02

தனியார் நூற்பாலை தீ விபத்தில் பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதம் :

செய்திப்பிரிவு

மங்கலம் அருகே தனியார் நூற்பாலையில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் பஞ்சு மூட்டைகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அக்ரஹாரபுதூரில் திருப்பூரை சேர்ந்த மணியன் என்பவருக்கு சொந்தமான நூற்பாலை செயல் படுகிறது. இங்கு வெளி மாநில மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த தொழி லாளர்கள் பலர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நூற்பாலையில் தொழிலாளர்கள் நேற்று பணியில் இருந்தபோது, ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் உள்ள பகுதிகளுக்கு வேகமாக பரவியது.

உடனடியாக தொழிலாளர்கள் வெளி யேற்றப்பட்டு, ஆலைநிர்வாகம் சார்பில் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பல்லடம் மற்றும் அவிநாசியில் இருந்து தீயணைப்புத் துறையினர் சென்று, சில மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும், பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. மங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT