Regional02

ஊராட்சி தலைவர்கள் போராட்டத்தால் - காளையார்கோவில் பிடிஓ பணியிட மாற்றம் :

செய்திப்பிரிவு

காளையார்கோவிலில் ஊராட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், காளை யார்கோவில் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படா மல், ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரனை கண்டித்தும் கடந்த 16-ம் தேதி காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் 43 ஊராட்சித் தலைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் சமரசம் ஏற்பட்டு கலைந்து சென்றனர். இதேபோல் ஏற்கெனவே பலமுறை பாஸ்கரனுக்கும், ஊராட்சித் தலைவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாஸ்கரனை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் ஊராட்சித் தலைவர்கள் முறையிட்டனர். இந்நிலையில் பாஸ்கரனை சிவகங்கை விடுப்பு மற்றும் பயிற்சி வட்டார வளர்ச்சி அலுவலராக நியமித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். மேலும் அப்பணியிடத்தில் இருந்த பிரதீப், காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT