Regional02

அரசு பள்ளியில் முப்பெரும் விழா :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

புரவலர் சேர்க்கை, கல்வெட்டு திறப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமால் தலைமை வகித்தார். மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி செங்கம் எம்எல்ஏ கிரி பேசினார்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஸ்டாலின், கல்விக்குழுத் தலைவர் முருகமணி உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் கல்விக் குழு உறுப்பி னர் மணி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT