வேலூர் வீரபிரம்மங்கார் மடத்தில் நடைபெற்ற ஆவணி அவிட்டம் விழாவில் தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் சங்கத்தினர் பூணூல் மாற்றிக்கொண்டனர். 
Regional02

விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் - வேலூரில் ஆவணி அவிட்டம் விழா :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் ஆவணி அவிட்டம் விழா வேலூர் காந்திரோடு, கே.வி.எஸ்.செட்டித் தெருவில் உள்ள வீர பிரம்மங்கார் மடத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்கத்தின் தலைவர் தேஜோமூர்த்தி தலைமை வகித்தார். முன்னதாக, நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நடராஜன், அமைப்புச்செயலாளர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் காயத்திரி மந்திரத்தை உச்சரித்தப்படி புதிய பூணூல் அணிந்துக் கொண்டனர்.

முன்னதாக, கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில், வேலூர் மாநகரைச் சேர்ந்த விஸ்வகர்ம நண்பர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக்கொண்டனர்.

SCROLL FOR NEXT