Regional02

அதிகரிக்கும் தெருவோர கடைகள் - ஜாக்சன் மார்க்கெட் பகுதியில் இடம் ஒதுக்க கோரிக்கை :

செய்திப்பிரிவு

காஞ்சி ஜாக்சன் மார்க்கெட் பகுதியில் தெருவோர கடைகள்அதிகரித்துள்ளன. இதனால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மார்கெட் பகுதியில் இடம் ஒதுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்து பூக்கடைச் சத்திரம் செல்லும் சாலையில் ஜாக்சன் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்கெட் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் பலர் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். மேலும் இந்தப் பகுதியைச் சுற்றிலும் தெருவோரக் கடைகளும் அதிகரித்துள்ளன. இதனால் இந்த மார்க்கெட் பகுதி அருகே விழாக் காலங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுபகிறது. தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் பலர் ஏழை வியாபாரிகள் என்பதால் அவர்களை அப்படியே அப்புறப்படுத்தாமல் அவர்களுக்கு மார்க்கெட் பகுதியில் இடம் ஒதுக்கித் தர வேண்டும். மார்க்கெட் பகுதியில் கடை இருந்தும் ஆக்கிரமித்துள்ளவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

SCROLL FOR NEXT