விழுப்புரம் கே.கே.சாலை, ரஹீம் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் தினேஷ் (12). இவர் விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்காக இரும்பினால் ஆன கம்பத்தில் கட்சி கொடி கட்டு அக்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் கொடிக்கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் மேற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.