Regional02

தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் 3 பேர் கைது :

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தாய், மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் பகுதியில் கடந்த மாதம் 7-ம் தேதி 3 பவுன் சங்கிலி பறிப்பு, 8-ம் தேதி பேரையூர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் 3 பவுன் பறிப்பு, 16-ம் தேதி வில்லிபுத்தூர் பகுதியில் 2.5 பவுன் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இது குறித்து எஸ்.ஐ. முத்துஇருளப்பன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் வசிக்கும் சன்னாபுல்லா என்பவரது மனைவி ரசியா(35), அவரது 16 வயது மகன் மற்றும் உறவினர் முகமதுபாவா(24) ஆகியோர் நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதையடுத்து மூவரையும் தனிப் படை போலீஸார் கைது செய்து 8.5 பவுன் நகைகளையும், பைக் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT