திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸ்டல் பிரிவில் முதலிடம் பெற்ற திருச்சி மாநகர காவல் ஆணையர் அருணுக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறார் ஏடிஜிபி (கமாண்டோ) அமல்ராஜ். உடன் மத்திய மண்டல ஐஜி வி.பாலகிருஷ்ணன். 
Regional01

மத்திய மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான - துப்பாக்கி சுடும் போட்டியில் தஞ்சை டிஐஜி முதலிடம் :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் அருகே நாரணமங் கலத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் மத்திய மண்டலத்தில் பணியாற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி மத்திய மண்டலத்தில் பணிபுரியும் 2 ஐஜி, 2 டிஐஜி, 13 எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.

பிஸ்டல் துப்பாக்கி சுடுதல், இன்சாஸ் துப்பாக்கி சுடுதல் என 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் முதலிடத்தையும், தஞ்சாவூர் டிஐஜி பிரவேஷ்குமார் 2-ம் இடத்தையும், நாகை எஸ்பி ஜவஹர் 3-ம் இடத்தையும் பிடித்தனர். அதேபோல, இன்சாஸ் துப்பாக்கி சுடும்போட்டியில் நாகை எஸ்பி ஜவஹர் முதலிடத்தையும், தஞ்சாவூர் டிஐஜி பிரவேஷ்குமார் 2-ம் இடத்தையும், திருவாரூர் எஸ்பி விஜயகுமார், புதுக்கோட்டை எஸ்பி நிஷாபார்த்திபன் ஆகியோர் 3-ம் இடத்தையும் பிடித்தனர். ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப் படையில் தஞ்சாவூர் டிஐஜி பிரவேஷ்குமார் முதலிடத்தையும், நாகப்பட்டினம் எஸ்பி ஜவஹர் 2-ம் இடத்தையும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் 3-ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஏடிஜிபி (கமாண்டோ) அமல்ராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

SCROLL FOR NEXT