Regional01

5 மாத குழந்தை சடலம் மீட்பு :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகேயுள்ள மண கெதி காலனி தெருவைச் சேர்ந்த வர் விஜய். இவர் நேற்று மாலை தனது வீட்டைச் சுற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் பின்புறம், ஒரு துணியில் 5 மாத ஆண் குழந்தையின் சடலம் சுற்றப்பட்டு கிடந்தது. இதுகுறித்து உடையார் பாளையம் காவல் நிலையத்தில் விஏஓ ராஜேந்திரபிரசாத் புகார் அளித்தார். அதன்பேரில், குழந் தையின் உடலை போலீஸார் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT