Regional01

கருத்தரங்கு :

செய்திப்பிரிவு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் தொடர்பான கருத்தரங்கம், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தென்காசி எம்.பி., தனுஷ் எம்.குமார் பேசும்போது, “தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சாலை அமைக்கும் பணிகளுக்கு தரக் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சாலை வசதிகளில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக தென்காசி மாவட்டம் திகழ அனைத்து அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி முன்னிலை வகித்தார். அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குணசேகரன் உரையாற்றினார்.

SCROLL FOR NEXT