Regional02

தி.மலை அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த - சாலை விபத்துகளில் இருவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த காட்டுதெள்ளூர் கிராமத்தில் வசித்தவர் சேகர்(35). இவர், திருக்கோவிலூரில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு தி.மலைக்கு ஆட்டோவில் நேற்று அதிகாலை வந்துள்ளார். திருவண்ணாமலை வட்டம் வெறையூர் அடுத்த சி.கல்லேரி கிராமத்தில் வந்த போது மழை பெய்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சேகர் உயிரிழந்தார். இது குறித்து வெறையூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இது குறித்து தி.மலை கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT