TNadu

1,668 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 942, பெண்கள் 726 எனமொத்தம்1,668 பேர் கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். டெல்லியில் இருந்துவந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 199, சென்னையில்185, ஈரோட்டில் 158, செங்கல்பட்டில் 102 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 97,603 ஆகஅதிகரித்துள்ளது.

இதுவரை 25 லட்சத்து 43,319 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,887 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 19,621 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,663 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,374 பேர்இறந்துள்ளனர் என்று தமிழகசுகாதாரத் துறை வெளியிட்டசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT