Regional02

ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77-வது பிறந்த நாளையொட்டி 15 வேலம்பாளையம் முதல் மண்டலத்தில் ‘நேரு பவன்’ என்ற புதிய அலுவலகத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சி. மெய்யப்பன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்டத் தலைவர் ஆர். கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

திருப்பூர் ராஜ்பவன் அலுவலகத்தில் ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்ட துணைத் தலைவர்கள் கோபால், ரத்தினமூர்த்தி மற்றும் மகிளா காங்கிரஸார் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT