பவானி புதிய பேருந்து நிலையம் எதிரில், ராம்ராஜ் காட்டன் நிருவனத்தின் புதிய ஷோரூமை, பி.முத்துசாமி திறந்து வைத்தார். 
Regional02

பவானியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா :

செய்திப்பிரிவு

பவானி புதிய பேருந்து நிலையம் எதிரில், ராம்ராஜ் காட்டன் நிறுவன புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.

தென் மாநிலம் முழுவதும் வேட்டி மற்றும் சட்டைகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனம், தமிழகத்தின் அனைத்து முன்னணி நகரங்களிலும் தனது விற்பனையகத்தைத் திறந்து ள்ளது. அதன் ஒருபகுதியாக பவானி புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப் பட்டுள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவன புதிய ஷோரூமினை, பி.முத்துசாமி திறந்து வைத்தார். ஆர்.சரவணன் முதல் விற்பனையைத் தொடங்கி வைக்க பி.எஸ்.சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார்.பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமித் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் வகையிலான (Anti bacterial) வேட்டி, சட்டைகள் மற்றும் மிருதுவாக வீட்டில் அணியும் வகையிலான வேட்டி மற்றும் டீ சர்ட் ஆகியவற்றை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் பல்வேறு வகையான வேட்டி, சட்டை, பனியன், உள்ளாடை உள்ளிட்ட பல்வேறு ரகங்கள், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ராம்ராஜ் காட்டன் நிறுவன ஆடைகளை ஷோரூமில் மட்டுமல்லாது, www.ramrajcotton.in என்ற இணையத்தின் மூலமும் வாங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

SCROLL FOR NEXT