Regional01

கோவில்பட்டி இளைஞர் மதுரையில் கொலை :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் பிரபு (33). இவர் மதுரையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். எல்லீஸ் நகரிலுள்ள காந்திஜி காலனி 3-வது தெருவில் குருமூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்தார்.

ஆக.19-ம் தேதி நள்ளிரவில் பிரபு மற்றும் குரு மூர்த்தி, அவரது நண்பர் ரிஸ்வான் அலி ஆகியோர் சேர்ந்து அதே பகுதியிலுள்ள ரணகாளியம்மன் கோயில் எதிரில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது, அவர்களுக்குள் போதையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக முற்றியதில் ஆத்திரமடைந்த குருமூர்த்தி, ரிஸ்வான் அலி ஆகியோர் சேர்ந்து கத்தியால் பிரபுவை குத்தியதில் அவர் உயிரிழந்தார்.

பிரபுவின் சகோதரர் கணேசன் கொடுத்த புகாரின் பேரில், ரிஷ்வான் அலி (22), குருமூர்த்தியை எஸ்எஸ்.காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் கைது செய்தார். ரிஷ்வான் அலி ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT