இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுக கடன் பெற்றதாகக் கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த சிறிது நாளில் ரூ.40,000 கோடி கடன் பெற்றுள்ளனர். மேலும் ரூ.92 ஆயிரம் கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளனர். மின்வாரியம், போக்குவரத்து துறையை கடனில் இருந்து மீட்க வழிதேடாமல் சாதி சண்டையை உருவாக்கும் நோக்கில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கை பூமராங் போல திமுக மீதே திரும்பும் என்றார்.