Regional01

கொடைக்கானல் மலைச்சாலையில் - சுற்றுலா வாகனம் கவிழ்ந்து கேரளாவை சேர்ந்த 17 பேர் காயம் :

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பாதுஷா(21), ஹர்ஷத் (21), தாரிக்(21), இப்ராகிம்(21), அதினன்(21), பெரோஸ்(21), பால்ஸ்(21) உள்ளிட்ட 17 பேர் கொடைக்கானலுக்கு நேற்று முன் தினம் இரவு வேனில் சுற்றுலா புறப்பட்டனர்.

பழநி-கொடைக்கானல் இடையே மலைச்சாலையில் நேற்று காலை வேன் சென்று கொண்டிருந்தபோது, கூம்பூர் வயல் என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு 300 அடி பள் ளத்தில் கவிழ்ந்தது.

பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் விபத்தை பார்த்து, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர்.

அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் படுகாயமடைந்த 17 இளைஞர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT