விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் அனந்தராமன் (45). இவர் 2006 முதல் 2016 வரை வச்சக்காரப்பட்டி ஊராட்சித் தலைவராக இருந்தார். 2016-ல் இந்த ஊராட்சி தனி ஊராட்சியானது. தற்போது ஊராட்சி துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார். மேலும் ஒப்பந்த அடிப்படையில் டாஸ்மாக் லாரிகளும் இயக்கி வந்தார்.
இந்நிலையில், தன்னிடம் பணிபுரியும் குருசாமி என்பவரது திருமணம் தடங்கம் கிராமத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்துவிட்டு தனது காரில் ஏற வந்தார். அப்போது, இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் அனந்தராமனை கொலை செய்து விட்டு தப்பினர். இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். ஊராட்சி நிர்வாகம் தொடர்பாக அனந்தராமன், ஊராட்சித் தலைவர் ஜெயபாண்டியம்மாளின் கணவர் பாலமுருகன் ஆகியோர் இடையே விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அனந்தராமனை கூலிப்படையை ஏவிக் கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.