தஞ்சாவூரைச் சேர்ந்த பெண்ணை தவறான செயலுக்கு தூண்டிய நபரை காரைக்குடி சாக்கோட்டை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே இடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா என்ற விஸ்வநாதன் (34). இவர் அறந்தாங்கி, திருச்சி ஆகிய இடங்களில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி தரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், இவரது துன் புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் கள் சிலர், காரைக்குடி அருகே இவரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் காரைக்குடி டிஎஸ்பி வினோஜி விசாரணை நடத்தி வந்தார்.
இதனிடையே ராஜா தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் ஒருவர், முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார். இதனை சாக்கோட்டை போலீஸார் விசாரித்தனர்.
அப்போது போலீஸாரிடம் அந்தப் பெண் கூறியதாவது: நான் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக பணியாற்றினேன்.
பத்து மாதங்களுக்கு முன்பு, என்னுடைய தோழி ஒருவர் மூலம் ராஜா அறிமுகமானார். இந் நிலையில் அவரது அழைப்பின் பேரில், சிவகங்கை மாவட்டம் சாக் கோட்டை அருகே புதுவயலில் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன்.
நிகழ்ச்சி முடிந்து அங்குள்ள விடுதியில் நானும், பிற தோழி களும் தங்கினோம்.
அங்கு வந்த ராஜா என்னை இழிவுபடுத்திப் பேசினார். மேலும் என்னை தவறான செயலுக்கு தூண்டினார் என்று தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் புகாரின் பேரில் ராஜா மீது வழக்குப் பதிவு செய்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.