Regional01

ஆம்பூரில் கொட்டி தீர்த்த கனமழை :

செய்திப்பிரிவு

ஆம்பூர்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய் யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. ஆம்பூர், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, ரெட்டிதோப்பு, கம்பிக்கொல்லை, பஜார் பகுதி, வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, ஜமீன் குளிதிகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணி முதல் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வானப்பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஆம்பூரில் 18.6 மி.மீ., வடபுதுப்பட்டில் 13.4 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரை தவிர மற்ற இடங்களில் நேற்று முன்தினம் மழை பெய்யவில்லை.

SCROLL FOR NEXT