தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொசப்பட்டு கிராமத்தில் உள்ள கணபதி மற்றும் சப்த கன்னிமார் கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் தொடங்கியது. புண்யாஹவாசனம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரம், அங்குரார்ப்பணம், முதல்கால யாகசாலை பூஜை, பிம்ப சுத்தி, பீடஸ்தாபனம், பிம்ப பிரதிஷ்டை உள்ளிட்டவை நடந்தது.
பின்னர் நேற்று காலை நாடி சந்தானம், தத்வார்ச்சனை, தத்வ ஹோமம், மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் ஆகியவை நடை பெற்றது. இதையடுத்து, யாக சாலையில் இருந்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களின் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சப்த கன்னிமார் சுவாமிகள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன்பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்யாறு